மகத்துவமும், வல்லமையுமுள்ள ஜெயவீரர் 57-0421S 1. உங்களுக்கு காலை வணக்கம். உங்கள் ஒவ்வொருவருக்கும் “ஈஸ்டர் வாழ்த்துக்கள்!” இது நம்முடைய கர்த்தரின் உயிர்த்தெழுதலை ஞாபகார்த்தமாகக் கொண்டாடும் மிக மகத்தான நாட்களில் ஒன்றாகும். இது உலகச் சரித்திரத்தின் மகத்தான எல்லா நாட்களைப் பார்க்கிலும் மகத்தான ஒன்றாகும். இது உயிர்த்தெழுதலாயுள்ளது. இந்த மகத்தான நாளின் பேரில் இந்தக் காலையில் இங்கிருப்பதற்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். சூரியன் உதயமாவதையும், பூமியிலிருந்து மலர்கள் மலருகின்றதையும், ஒவ்வொரு காரியமும் ஈஸ்டரைக் குறித்துப் பேசுகிறதையும் காணவே நாம் இங்கிருக்கிறோம். இப்பொழுது நாம் நம்முடையத் தலைகளை சற்று நேரம் தாழ்த்துவோமாக. 2 பிதாவாகிய தேவனே, உம்முடைய சமூகத்திற்குள்ளாக நாங்கள் வருகிறோம். நீர் இந்தக் காலையில் பரலோகத்திலிருந்து சற்று கூடுதலான ஆசீர்வாதத்தையும், எங்கள் ஆத்துமாக்களில் சிறு ஈஸ்டர் தொடுதலையும் எங்களுக்குத் தரும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது எம்மாவூரிலிருந்து வந்தவர்கள், “அவருடையப் பிரசன்னத்தினால் நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கூறினதுபோல நாங்களும் கூறுவோமாக. நாங்கள் அதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 3 நாம் ஆராதனைக்குள் செல்லவிருக்கின்றபடியால் பரிசுத்த மத்தேயுவினுடைய சுவிசேஷத்தின், கடைசி அதிகாரமான 28-ம் அதிகாரத்தில் 7-வது வசனத்தை ஒரு பாடப்பொருளுக்காக நான் வாசிக்க விரும்புகிறேன். சீக்கிரமாய் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 4 மனிதனுக்கும் மற்றும் இப்புவியின் மக்களுக்கும் அநேக மகத்தானக் கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ஒன்றைப்போல, “அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று போய் அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்ற இப்படிப்பட்ட ஒரு முக்கியமான கட்டளை ஒருபோதும் கொடுக்கப்பட்டிருந்ததே இல்லை. அது ஒரு மகத்தான கட்டளையாயுள்ளது. முதன் முறையாக இது ஒரு மகத்தான ஜெயங்கொள்ளுதலாய் இருந்த காரணத்தால் இது இவ்வாறு கொடுக்கப்பட முடிந்தது. 5 நம்முடைய நாட்களில், கடந்துபோன நாட்களில், இந்த உலக மகா சரித்திரத்தில், அதனுடையப் பெரிய பரந்த யுத்த களங்களில் மனிதன் இருந்து வந்துள்ளான். அநேக பெரிய ஜெய வீரர்கள் இருந்து வந்திருக்கின்றனர். மானிட இனத்திற்காக அநேக பெரிய காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 6 உதாரணமாக, நான் இக்காலையில் மிகவும் சீக்கிரமாக எழுந்து வந்துகொண்டிருந்தபோது, நான் இதைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன், மேலும் அதிகமாகப் படிக்க காலையில் தருணம் கிடைக்கவில்லை. காரணம், கடந்த இரவு, நான் பேசப்போவது எந்தப் பகுதி என்று எனக்குத் தெரியவில்லை, இன்றைக்கு நானும் போதகரும் ஆராதனைகளில் இருக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் நான் வழியில் வரும்போது, என்ன பேசலாம் என்று சிந்திக்க நேர்ந்தபோது, இந்தக் காலையில் நான் அறிந்துள்ள மிகச் சிறந்த ஒரு செய்தியை எடுத்து அவருடைய ஜனங்களுக்குக் கூறலாம் என்று எண்ணினேன். அப்பொழுது நான், “போய் அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்ற இதைக் குறித்து எண்ணிப் பார்த்தேன். இப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரைப் “பின்பற்றுகிறவர்களாய்” இருக்கின்றனர். ஒரு சீஷன் என்றால், “பின்பற்றுகிறவன்” என்பதாய் உள்ளது. எனவே நான், மகத்துவமும், வல்லமையுமுள்ள ஜெயவீரர் என்ற இந்தப் பாடப்பொருளைக் குறித்து சிந்தித்துப்பார்த்தேன். 7 இந்த உலகத்தில் எத்தனை மகத்தான ஜெய வீரர்களை நாம் உடையவர்களாயிருந்தோம் என்பதைக் குறித்தும், மேலான மானிட வாழ்க்கை முறையினை கடைபிடிக்க அவர்கள் என்ன மகத்தான காரியங்களையெல்லாம் செய்துள்ளனர் என்பதைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்தேன். நான் மகத்தான நெப்போலியனக் குறித்தும், அவன் தன்னுடைய நாட்களில் எப்படி இருந்தான் என்றும், எப்படி அவன் ஒரு சரியான பிரஞ்சுக்காரனாயில்லாதிருந்தான் என்றும், ஆனால் அவன் தன்னுடைய சிந்தையில் ஏதோ ஒரு காரியத்தை உடையவனாயிருந்தான் என்பதையுங் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். முதலில் அவன்—அவன் பிரான்சு நாட்டை வெறுத்தான். அவனுக்குத் தன்னையே பிடிக்கவில்லை. அவன் தீவுகளிலிருந்து வந்திருந்தான். ஆனால் என்றோ ஒரு நாளில் அவன் ஜெயங்கொள்வான் என்ற எண்ணத்தை தன்னுடைய சிந்தையில் அவன் கொண்டிருந்தான், அவன் இந்த எண்ணத்தை தன்னுடைய சிந்தையில் கொண்டிருந்த காரணத்தால், அவன் ஏதோ ஒரு காரியத்தைச் செயல்புரிய வேண்டியதாயிருந்தது. 8 ஒவ்வொரு மனிதனுக்குமே, அதாவது நீங்கள் ஒரு பணியை செய்வதற்கு முன்பு, நீங்கள் ஏதோ ஒரு நோக்கத்தை, ஏதோ ஒரு மாற்று வழியை, நீங்கள் செயல்புரிந்து கொண்டிருக்கிற ஏதோ ஒன்றின்பேரில், ஒரு பணிபுரியும் நோக்கத்தை, ஏதோ ஒன்றிற்கான பணிபுரியும் முறையினை நீங்கள் உடையவர்களாயிருக்க வேண்டும். 9 நாம் யாவரும் அறிந்துள்ளபடி ஹிட்லரின் சரித்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால்…இல்லை, ஹிட்லருடைய சரித்திரத்தை அல்ல, ஆனால் நெப்போலியனுடைய சரித்திரத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது அவன் சந்திரனுக்கு செல்வதுபோன்றும், நட்சத்திரங்களை மாற்றுவது போன்றும் செயல்பட்டான். அவன் அந்தவிதமான எதிர்பார்த்தலோடு செயல்பட்டான், ஏனென்றால் அவன் ஒரு முறை அவ்வாறு செயல்பட்டு, அவன் ஜெயங்கொண்டான். அவன் பிரான்சுக்குள்ளாக வந்து, அவன் ஒரு மகத்தான ஜெயவீரனானன். அவன் அநேகம் பேரை கொன்றுபோட்டான், ஏனென்றால் அவர்கள் அவனோடு இணங்காமலிருந்தனர். எனவே அவன் தனக்கு எதிராக இருந்த ஒவ்வொரு காரியத்தையும் தன்னுடைய முழு தேசத்திலிருந்தும் சுத்தம் செய்துவிட்டான். அவன் முற்றிலுமாக அதை துடைத்தழித்துப் போட்டான், ஏனென்றால் அவன் அதை அந்தவிதமாகச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் அதை அந்தவிதமாக செய்யாமலிருந்திருந்தால், எல்லா நேரத்திலும் அவனுக்கு எதிரான ஒரு காரியம் இருந்திருக்கும், ஏனென்றால் அவன் தன்னுடைய மகத்தான திட்டத்தை தன்னுடைய சிந்தையிலே கொண்டிருந்தான். அவனுடைய சொந்த ஜீவனையே போராடி நிலைநாட்ட வேண்டிய நிலையில் இருந்தது, எனவே அவன் தன்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் தன்னால் அதை வைத்துக்கொள்ளமுடிந்த அளவு குறையற்ற விதத்தில் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. 10 நான் மகத்தான் ஜெயங்கொள்பவரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில், இப்பொழுது நான் கூறுவதை நீங்கள் கவனித்துக் கொண்டு வருகிறீர்கள் என்றே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவருடைய ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு காரியமும் அவருக்கானதாய் இருக்க வேண்டும். இருதயமும், ஆத்துமாவும், சரீரமும் அவருக்கானதாயிருக்க வேண்டும். அவருக்கு எதிராக ஒன்றுமே இருக்க முடியாது. அவருக்கு எதிராக இருந்த எந்தக் காரியத்தையும், அவர் அதை அகற்றிப்போட வேண்டியதாயிருந்தது. அவர் ஒவ்வொரு காரியத்தையும் முற்றிலும் தனக்காக உடையவராகவே இருக்க வேண்டும். அப்பொழுது… 11 நெப்போலியன், அவன் யுத்த ஆயுதங்களையும், பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும், சிறு துப்பாக்கிகளையும், பட்டயங்களையும் பயன்படுத்த தேர்ந்தெடுத்திருந்தான். அவன் உலகத்தை ஜெயங்கொண்டவன் என்ற ஒரு எண்ணத்தோடு புறப்பட்டுச் சென்றான். அவன் முப்பத்தி மூன்று வயதிலே அதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினான். அவன் ஒரு வாலிபனாயிருந்தபோது, அவன் ஒரு தடையுத்தரவு விதிப்பவனாயிருந்தான். அவனுடைய மகா கீர்த்தி அவனை தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொள்ளச் செய்துவிட்டது. அவன் ஒரு குடிகாரனாய் முப்பத்தி மூன்று வயதிலே மரிக்கும் வரையில் அது அவனை நரம்புக் கோளாறு நிலையினையடைச் செய்தது. அவன் தன்னுடையப் புகழில் நிலைத்து நிற்க முடியாமற்போயிற்று. முப்பத்தி மூன்று வயதிலே உலகத்தையே ஜெயங்கொண்டு, ஒரு குடிகாரனாய் மரித்துப்போன ஒரு மனிதனை, இவனை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். அவன் தன்னுடைய கீர்த்தியின் நிமித்தமாக, அவன் சண்டையிட்டு போராடிக்கொண்டிருந்த அந்த அடிப்படை ஒழுக்கமுறையையே இழந்து போய்விட்டான். அவன் ஒருவிதமான மாதிரியாயிருந்தான், இல்லை, ஒரு மாதிரியாயல்ல, அவன் பிசாசினுடையக் கருவியாயிருந்தான் என்றே நான் கூறுவேன். உலகத்தையே போராடி வீழ்த்த முயன்று, அவன் முப்பத்தி மூன்று வயதிலேயே தோல்வியுற்றான். 12 ஆனால், ஓ, நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த மகத்தான, வல்லமையான ஜெயவீரரோ பூமியிலும், நரகத்திலுமிருந்த எல்லாவற்றையுமே ஜெயங்கொண்டார். முப்பத்தி மூன்று வயதிலே ஒரு மகத்தான, வல்லமையுள்ள ஜெயவீரர்! 13 யுத்தக் களங்களில் சண்டையிடப்பட்டிருக்கின்ற பெரிய யுத்தங்களைக் குறித்து நான் நினைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நெப்போலியன் தன்னுடைய முடிவினைச் சந்திக்க வாட்டர்லூ என்ற இடத்திற்கு வந்து முடிவுற்றான் என்பதை நாம் அறிவோம். அண்மையில் அவனுடைய இரதத்தின் அழிபாட்டைக் குறித்தும், குதிரை வீரர்களைக் குறித்தும், அந்த மனிதனைக் குறித்தும், எப்படி அவைகள் யுத்தக் களத்தில் கிடந்தன என்பதைக் குறித்தும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கும்படி தயாரிக்கப்பட்டிருந்த காட்சியைக் காணும் ஒரு சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. இரதங்கள் ஒன்றோடொன்று மோதினவாறு கிடக்க, அதன் சக்கரங்கள் உடைப்பட்டிருப்பதைப் போன்று அந்த மகத்தான காட்சிகள் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தன. 14 அது என்ன ஒரு மாறுபட்ட காட்சியாய் உள்ளது! முப்பத்தி மூன்று வயதினையுடைய அந்த மனிதனையும், அவனுடைய பெரிய யுத்தமும், வெற்றியும் அங்கே அவனுடைய நினைவு சின்னக் காட்சியில் அவமானமாய்க் கிடக்கின்றன. அப்படியானால் எருசலேமுக்குச் சென்று, ஒரு மகத்தான வல்லமையுள்ள ஜெயவீரரின் நினைவுச் சின்னமான ஒரு காலியான கல்லறையை நோக்கிப் பார்ப்போம். 15 மற்றொன்று, ஜெயங்கொள்வதில் ஒரு காரியம் உண்டு. நாம் பெற்றுள்ள ஏதோ ஒரு காரியத்திற்காக நாம் சண்டையிட்டுக் கொண்டிருப்போமேயானால், நம்முடைய சரீரத்தில் ஒரு வியாதி இருக்குமேயானால், நாம் மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையே சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம், அப்பொழுது அது ஜெயங்கொள்ளப்படுகிறதை நாம் காண்கையில், அது என்ன ஒரு வெற்றியாயுள்ளது. நாம் ஒரு பெரிய பழக்க வழக்கத்திற்கு சண்டையிட்டுக்கொண்டிருப்போமேயானால், அல்லது நம்மை சிக்க வைக்கிற ஏதோ ஒரு பெரிய காரியத்திற்காக சண்டையிட்டுக்கொண்டிருப்போமேயானால், முடிவிலே நாம் அதனை வெற்றிச் சிறந்து, பெரிய கொடிகளை அசைத்துக் காட்டுகிறபோது, அது நமக்குள்ளே என்ன ஓர் உணர்வினை அளிக்கிறதாயிருக்கும். ஏனென்றால் அப்பொழுது நாம் ஒரு ஜெயங்கொண்டவர்களாய் இருக்க முடியும். 16 இப்பொழுது நான் கடைசி யுத்தத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், எப்படி ஹிட்லர் வார்சா என்ற இடத்தைக் கைப்பற்றினான். ஜெர்மானியர்கள் தங்களுடைய மகத்தான வெற்றிகளில் மிகச் சிறந்த ஒன்றாய் இருக்கக் கூடியது அதுவே என்று எண்ணினர், ஏனென்றால் தங்களுடையப் பிரதானத் தலைமை தளபதியான அடால்ஃப் ஹிட்லர் வார்சா என்ற இடத்தில் இருந்த எல்லாவற்றையுமே நொறுக்கி புதையுண்டு மறையச் செய்தான். பாலங்களை உடைத்தெரிந்தான், மிகப் பெரிய பாலம் உடைந்து விழுந்தது. விழுந்துபோன பாலங்களின் புகைப்படங்களைப் பெரிதாக செய்தித்தாள்கள் பிரசுரித்தன. ஜெர்மானியர்களோ வீதியிலே பவனிவந்து, முரசு கொட்டி, ஊதல்களை ஊத ஆயிரக்கணக்கான ஆகாய விமானங்கள் அவனுக்கு மேலே பறந்து சென்றன, ஏனென்றால் அவன் மிகப் பெரிய வெற்றியை முதன்முறையாக பெற்றிருந்தான். மகா அலெக்சாந்தரைப் போல அல்லது ஒரு நெப்போலியனைப் போல அணிவகுப்பு நடத்தினர். ஆனால் அவன் எங்கே முடிவுற்றான்? அவமானத்தில். நிச்சயமாகவே, அவன் அவமானத்தில் முடிவுற்றான். 17 அவர்கள் பெரிய பர்மா மலைகளினூடாகக் கணவாயைக் கட்டினதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அது…அவர்கள் அந்த மலையைக் கடக்க வேண்டும் என்றால்…அது இருக்க வேண்டும். ஒருவேளை, இந்தப் பெரிய மலைக் கணவாயைக் கடந்த பையங்களில் சிலர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அது என்ன ஒரு பணியாயிருந்தது! அதற்கு உண்மையாகவே எவ்வளவு வேலை தேவைப்பட்டது. அவர்கள் என்ன ஒரு உண்மையான பணியினைச் செய்தனர். அந்தப் பர்மா மலைக் கணவாயினைக் கட்ட எவ்வளவு பணம் செலவானது, கோடிக்கணக்கான டாலர்கள் செல்வாயிற்றே! அதனைக் கட்டுகையில், சில பையன்கள் தங்களுடைய உயிரை இழந்தனர். ஆனால் முடிவிலே, மலைக் கணவாயின் கடைசி மைல் தூரத்தில் கட்டுமானப் பணி கட்டி முடிக்கப்பட்டபோது, எப்படிப்பட்ட ஜெய ஆரவாரங்கள் ஜனங்களிடத்திலிருந்து எழும்பின! அவர்கள் மலைகளினூடாகக் கடந்து சென்று ஜெயம் பெற, ஒரு மலைக் கணவாயைக் பெற்றிருந்தனர். 18 நான் மற்றொரு பாதையைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அது நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தருடைய ஜீவனையே கிரயமாக எடுத்துக்கொண்டது. அது புவியின் மீதுள்ள ஒரு பாதையாய் மாத்திரம் இருக்கவில்லை, அது “பரிசுத்தமான பெரும்பாதை” என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும்பாதையான வழியாயிருந்தது, தீட்டுள்ளவன் அதனூடாகக் கடந்து செல்வதில்லை. ஆனால் அடையாளமிடப்பட்டவர் மாத்திரமே கடந்து செல்வர். அவர் பட்சத்திலிருப்பவர்கள் மாத்திரமே இந்தப் பெரும்பாதையில் கடந்து செல்வர். 19 மகத்தான வெற்றிகள் சூடப்பட்டுள்ளன. இன்றைக்கும் நம்மில் அநேகரால் முதலாம் உலகப் போரைக் குறித்து நன்கு நினைவுகூற முடியும். அப்பொழுது நான் ஒரு சிறு பையனாயிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுது ஊதல்கள் ஊதப்பட்டதை என்னால் கேட்க முடிந்தது. விவசாயிகளும்கூட வயல்களில் தங்களுடையக் குதிரைகளை நிறுத்தி, தங்களுடையத் தொப்பிகளைக் கழற்றி ஆட்டினர். அவர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் உரக்கமாய் சத்தமிட்டனர். என்ன சம்பவித்திருந்தது? யுத்தமோ முடிவுற்றிருந்தது. வெற்றிவாகை சூடப்பட்டது. நாம் சண்டையிட்டுக்கொண்டிருந்த பெரியப் பொருளாதாரத்திற்கான வெற்றியை முடிவிலே சூடினோம். 20 நான் இந்தக் கடைசி உலக யுத்தத்தைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் அந்தத் தெருவின் குறுக்கே வசித்து வந்தேன். அப்பொழுது ஊதல்கள் ஊதத் துவங்கினவுடன், ஜனங்கள் முற்றங்களில் ஓடினர். ஸ்திரீகளோ தங்களுடைய முந்தானை போன்ற போர்வையை எடுத்து ஆகாயத்தை நோக்கி சுற்றினர். துப்பாக்கிக் குண்டுகள் மரங்களுக்கு மேலே வெடித்து முழக்கமிட்டன. ஊதல்கள் ஊதப்பட்டன. மோட்டார் வாகனங்கள் வீதியினூடாகப் பாய்ந்து சென்றன. ஜனங்கள் முழங்காற்படியிட்டு, தங்களுடையக் கரங்களை உயர்த்தினர். அவர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் கதறி அழுதனர். ஏன்? காரணம் யுத்தமோ முடிவுற்றிருந்தது. சமுத்திரத்திற்கு அப்பால் ஆசீர்வதிப்பட்ட அந்த அருமையான பையன்கள் சீக்கிரத்தில் கடற்பயணம் மேற்கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு மீண்டும் வந்து சேருவர். என்னே ஒரு ஜெயம்! என்னே ஒரு நேரம், அது எந்த ஒரு இருதயத்தையும் சிலிர்ப்படையச் செய்யும்! என்னே ஒரு குதூகலக் கொண்டாட்ட விழா! அந்த இரவு ஒவ்வொருவரும் அப்பேர்ப்பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வோடிருந்தனர், உங்களால் உணவகங்களுக்குள் நடந்து சென்று, உணவினை உண்டுவிட்டு, அதற்கான பணம் செலுத்தாமலேயே வெளியே நடந்து வர முடிந்தது. அதில் பிரச்சனையிருந்திருக்காது. உங்களால் அடுத்த மனிதனுடைய மோட்டார் வாகனத்தை உபயோகப்படுத்த முடிந்தது, அதில் பிரச்சனையிருந்திருக்காது. உங்களுக்கு என்ன வேண்டியதாயிருந்ததோ அதை நீங்களே கேட்டுப் பெற்றுக்கொள்ள முடிந்தது. காரணம் ஏன்? வெற்றி சூடப்பட்டாயிற்று. பையன்களோ வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். எல்லாமே முற்று பெற்றதாயிருந்தது. 21 என் சகோதரனே, அந்தவிதமான உணர்வுகள் எல்லா நேரத்திலும் தரித்திருக்க முடியாதது குறைபாடாயுள்ளதே என்பதைக் குறித்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கிறிஸ்தவனுக்கோ இக்காலையில், வெற்றி சூடப்பட்டுள்ளது. சந்தோஷ மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கிறன. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான யுத்தம் முற்று பெற்றுவிட்டது. ஜெயமோ சூடப்பட்டுவிட்டது. 22 எந்த வெற்றியும் சூடப்படுவதற்கு முன்னர், மகத்தான கிரயங்கள் செலுத்தப்பட வேண்டும். ஓ, என்ன கிரயங்கள்! சில சமயங்களில் அவர்கள் ஆழத்தில் இருக்கின்றனர். அவர்கள் கண்ணீர் மல்க பெரியத் தழும்புகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், நாம் மலையினைப் பெற்றிருந்தால், நாம் பள்ளத்தாக்கை உடையவர்களாயிருக்க வேண்டும். நாம் சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ளும் முன், நாம் மழையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் பகல் வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ளும் முன், நாம் இரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் சரியானதைப் பெற்றுக் கொள்ளும் முன்னர், நாம் தவறாயிருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் தவறு என்ன என்பதையே நாம் ஒருபோதும் அறிந்துகொண்டிருந்திருக்கமாட்டோம். 23 ஆனால் ஜெயங்கொள்ள, இதுவரை சண்டையிட்டு வெற்றி பெற்ற யுத்தங்களிலேயே மிகப் பெரிய யுத்தத்தில் வெற்றி பெற அநேக ஆண்டுகளுக்கு முன்னர் மகிமையிலிருந்து ஒருவர் வந்தார். அவர் தம்மைத் தூதனுடைய ரூபத்தில் தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒரு மகத்தான நபராக வரவில்லை. ஆனால் அவர் ஒரு யுத்தத்தில் வெற்றிபெற கைத்துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும், அணு குண்டுகளையும் பயன்படுத்தப்போவதில்லை என்பதை நிரூபிக்கப் போகிறவராயிருந்தார். அவர் தாழ்மையை வஸ்திரமாக உடுத்திக் கொண்டு, ஒரு குழந்தையைப் போல, ஒரு முன்னணையில் பிறந்தார். அவர் வந்தபோது, அவருடைய பிறப்பிற்கு ஒரு ஸ்தலம் கூட இல்லாமலிருந்தது. அவர் உபயோகித்த வித்தியாசமான போராயுதங்களை நீங்கள் நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 24 இப்பொழுது, ஆதாமினுடைய இனம் முழுவதுமே அடிமைத்தனத்தில் இருந்தது. அவர்கள் நம்பிக்கையில்லாமல், தேவனில்லாமல், வாய்ப்பில்லாமல், இரக்கமில்லாமல், அவர்களுக்கு உதவக் கூடிய எந்தக் காரியமும் இல்லாதவர்களாய் இருந்தனர். பெரிய சத்துருக்களால் தாழ்வான இழக்கப்பட்ட ஸ்தலத்தில், அந்தகாரத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து வெளியேற ஒரு வழியுமில்லாதிருந்தது. அதற்கு எவருமே உதவி செய்ய முடியாமலிருந்து. எதுவுமே செய்ய முடியாமற்போயிற்று. அது ஒரு முற்றிலுமான, முழுமையான இழப்பைப் போன்று காணப்பட்டது. 25 ஆனால் நம்முடைய மாவீரர், மகிமையின் நுழைவாயிலிலிருந்து இறங்கி வந்தார், எளிமையாய் இறங்கி வந்தருள் செய்தாரே! 26 ஏனென்றால், பூமியின் மேலிருந்த எந்த மனிதனும் அப்பணியினைச் செய்ய முடியாததாயிருந்தது. உலகப்பிரகாரமாகப் பேசினால் அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான நிலையில் இருந்தனர். நாம் யாவரும் “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் உலகத்தில் வந்தவர்களாய்” இருந்தோம். நம்மால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள முடியாது. நாம் உதவியற்றவர்களாய், தோற்கடிக்கப்பட்டவர்களாய், எப்பக்கமும் ஒழுங்கின்மையாய், எல்லாரும் ஐக்கியப்படாமல் நின்றோம். நம்மால் நியாயப் பிரமாணங்களையும், வழிபாட்டு முறைகளையும் கைக்கொள்ள முடியாமலும், நம்முடையப் பெலவீனத்தை கண்டறிய முடியாதவர்களுமாய் இருந்தோம். நம்மால் அதைக் கண்டறியக்கூடாமற்போயிற்று. எனவே முழு மானிட வர்க்கமும் வீழ்த்தப்பட்டு வீணானதைப் போன்று தென்பட்டது. 27 அப்பொழுது அவர் வந்தார், அவர் இறங்கி வந்தார். காரணம், வேதமோ, “அவர் ஆதியிலே இருந்தார், அவர் வார்த்தையாய் இருந்தார்” என்று கூறியுள்ளது. அவர் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாய் இருந்தார். லோகாஸ், ஆதியில் வார்த்தையாய் இருந்தது. அவரே வார்த்தையானார். அதன்பின்னர் மகிமையான ஈஸ்டர் நாளில் அவர் எழும்பினபோது, அவர் வார்த்தையாக மட்டும் மாறினவராயில்லாமல், அவர் தம்முடைய சொந்த வார்த்தையின் பிரதான ஆசாரியரானார். ஓ, சகோதரன் நெவில், என்ன ஒரு மகிமையான காரியமாயிற்றே! சற்று சிந்தித்துப் பாருங்களேன்! அவர் வார்த்தையாய் மாத்திரமில்லாமல், அவர் தம்முடைய சொந்த வார்த்தையின் பிரதான ஆசாரியராயிருக்கிறார். நம்மால் எப்படி அதைச் சந்தேகிக்க முடியும்? நாம் விசுவாசிக்காமல் எப்படி அவரிடத்தில் நடந்து சென்று, நாம் கேட்பதை பெற்றுக்கொள்ள முடியும்? ஏனென்றால் அவர் வார்த்தையாயும், வார்த்தையின் பரிந்து பேசுபவராயிருக்கிறாரே! அந்த லோகாஸ் வார்த்தையானது, வார்த்தை மாம்சமானது; வார்த்தையாயிருந்த அதே மாம்சம் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இப்பொழுது தம்முடைய வார்த்தைக்கென்று அவரே பிரதான ஆசாரியராய் பரிந்துப் பேசிக் கொண்டிருக்கிறார். 28 அதுதான் சம்பவிக்கிறதே! அதுவே சபை பெற்றுள்ள பொருளாயுள்ளது. என்னே ஓர் ஆயுதம்! அதைப் போன்ற ஒன்று இதுவரை இருந்ததேக் கிடையாது. அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வந்தபோது, அவர் ஒரு முன்னணையில் பிறந்தார். அவர் உலகத்தை ஜெயிக்க அன்பை, அ—ன்—பு என்னும் ஆயுதத்தை உபயோகப்படுத்த வந்தார்; இராணுவ துப்பாக்கிக் குண்டுகளையல்ல, இயந்திரத் துப்பாக்கிகளையல்ல, பீரங்கிகளையல்ல. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான பாணியில் வந்தார். அவர் அன்பின் ரூபத்தில் வந்தார். அவர் தேவனுடைய அன்பாய் இருந்தார். 29 ஒரு சமயம் நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, கிறிஸ்து என்னை நேசித்தார் என்றும், தேவன் என்னை வெறுத்தார் என்றும் யோசிப்பதுண்டு; ஏனென்றால் கிறிஸ்து எனக்காக மரித்தார், ஆனால் தேவன் எனக்கு விரோதமான ஒரு காரியத்தை உடையவராயிருந்தார் என்று நினைப்பதுண்டு. ஆனால் கிறிஸ்து தேவனுடைய இருதயமாய் இருக்கிறார் என்பதை நான் கண்டறிந்து கொண்டேன். “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” 30 இப்பொழுது முதலாவது அவர் ஜெயங்கொள்ள வந்தார். பிசாசு இந்த உலகத்தில் வைத்திருந்த காரியம் பெரும் வெறுப்பாயிருந்தது. அவர் அந்த பெரும் வெறுப்பை ஜெயங்கொள்ள வந்தார். நாம் நம்முடைய யுத்தங்களில் ஜெயங்கொள்ளும்போது, உலகப்பிரகாரமான யுத்தங்களில், அது எப்பொழுதும் ஒரு பகைமையை தொடர்ந்து வைத்துவிட்டுப் போகிறது; ஏனென்றால் அந்தவிதமான யுத்தங்கள் சத்துருவினுடையதாயுள்ளது. ஆனால் கிறிஸ்து பகைமையை வெல்ல, நேசிக்காதவர்களை நேசிக்க அன்போடு வந்தார். அவர் ஒரு வித்தியாசமான போர்க் கருவியுடன் வந்தார். அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, மரணத்தை உத்தரித்து, ஒரு மாதிரியைக் கொடுக்க, “தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டார்.” அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர் மனுஷர் மத்தியில் நடந்தார். 31 அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினபோது, அவர் தம்முடைய போராயுதக் கருவிகளை நிரூபித்தார். அவர் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையுங்கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தபோது, அவர் அணு சக்திக்கு மேலாக தாம் கொண்டிருந்த வல்லமையை நிரூபித்தார். அவர் மீனை மாத்திரம் வளரச் செய்யவில்லை, ஆனால் அவர் பொரித்த மீனையும் வளரச் செய்தார். அவர் அந்த அப்பங்களுக்கான கோதுமையை மாத்திரம் வளரச் செய்யவில்லை, அவர் அந்தச் சுடப்பட்ட வாற்கோதுமை அப்பங்களையும் வளரச் செய்தார். அவர் மகத்தான, வல்லமையான ஜெயவீரராயிருந்தார் என்பதை அது காண்பித்தது. அவர் கிணற்றிலிருந்து தண்ணீரை மாத்திரம் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அவர் ஜெயங்கொள்ளக் கூடிய வல்லமையை உடையவராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் நேசித்தார், அவருடைய ஆயுதம் அன்பாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். 32 அதன்பின்னர் அவர் ஒரு நாள் லாசருவினுடைய கல்லறையின் அருகில் நின்றபோது, அங்கே அந்த மனிதன் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு நான்கு நாட்களாயிருந்தபோது, அவர் இவ்வாறு செய்தார். அவருக்கு அருகில் நின்றவர்களோ, “இப்பொழுது அவன் மேல் துர்நாற்றம் வீசுமே” என்றனர். அவனுடைய மூக்கு உள்ளுக்குள்ளே அழுகி விழுந்துப்போய், தோல் புழுக்கள் அந்தச் சரீரத்தில் நெளிந்துகொண்டிருந்தன. இயேசு வல்லமையான ஜெயவீரராய் அங்கே நின்று, அவர் அங்கு நின்று மார்த்தாள், மரியாளிடத்தில் கூறும்போது, “‘நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்’ என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டார். அவர் இதைக் கூறும்போது, (அவர்கள், “எங்களுடைய சகோதரன் மரித்துப்போய்விட்டான்” என்று கூறினபோது), அவரோ, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். நித்தியமான, ஆசீர்வதிக்கப்பட்ட வல்லமை எனக்குள்ளே இருக்கிறது என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்றார். அவர் அதுபோன்ற ஓர் அறிக்கையை மாத்திரம் கூறவில்லை, அவர் கூறின ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்ற வல்லவராயிருந்தார், ஏனென்றால் அவர் வல்லமையுள்ள ஜெயவீரராயிருந்தார். 33 அவருக்குள் வாசமாயிருந்த தேவத்துவத்தை ஒரு மனிதனாக மாம்ச சரீரத்தில் திரையிடப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தார், ஆனால் அங்கே உட்புறத்தில் வாசமாயிருந்ததோ, மகத்தான, வல்லமையுள்ள ஒருவரான சர்வ வல்ல தேவனேயன்றி வேறு யாருமல்ல. அவரால் மறுபடியும் சிருஷ்டிக்க முடிந்தது. அவரால் புதியக் காரியங்களை சிருஷ்டிக்க முடிந்தது. அவர் கேட்டது ஒரு விநாடியில் கொடுக்கப்படும்படி அவரால் உரைக்க முடிந்தது. ஆனால் அவர் தம்மைத் தாழ்த்தினார். அவர் மரண பரியந்தம் தாழ்த்தினார். அவர் ஒரு மாதிரியை அளிக்க விரும்பினார். அவர் சரியான விதமான ஒரு ஜெயவீரராயிருக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் அவ்வாறே இருந்தார். அவர் தம்மையே நிரூபித்துக் காண்பித்தார். 34 நான் என்னுடைய கூட்டத்தில் அவ்வப்போது கூறியுள்ளது போல, இந்த அழகான ஈஸ்டர் காலையில், இந்த ஜனக்கூட்டத்தில் அது ஒருகால் சாட்சி பகருவதாயிருக்கலாம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தை ஏற்றுக்கொள்வதில் விசுவாசங்கொள்ளாதிருக்கிற ஒரு குறிப்பிட்ட சபையைச் சார்ந்த பெண்மணி இருந்தாள். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.” அந்த மனிதர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்றும், ஓர் அற்புதமான மனிதர் என்றும், நான் அவரை தெய்வீகத்தன்மை கொண்ட தேவனாக்கிவிட்டதாகவும் அவள் என்னிடத்தில் கூறினாள். அதற்கு நான், “அவர் தெய்வீக தன்மைக் கொண்டிருந்தார். அவர் தேவனே” என்றேன். அப்பொழுது அவள், “நீர் அவரை மிகவும் மகத்தானவராக்க முயற்சிக்கிறீர்” என்றாள். 35 அதற்கு நானோ, “அவருடைய மகத்துவத்தை விவரித்துக் கூறக் கூடிய வார்த்தைகளேக் கிடையாதே!” என்றேன். மானிட நாவு அதை வெளிப்படுத்திக் கூறும் வார்த்தைகளை ஒரு போதும் கண்டறிந்ததேயில்லையே! என்றேன். 36 அன்றொரு நாள் வாஷிங்டன் DC-யிலிருந்து வந்த அரசாங்க அரசியல் நிபுணரான ஒரு மனிதனிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் ஒன்றாகக் கூடி காலை சிற்றுண்டியை உண்ணும்போது, அவர் ஒரு சிறிய சாட்சியைக் கூறினார். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு லூத்தரனாக இருந்து வந்தேன்,” ஆனால், “அன்றொரு நாள் பண்டைய மாதிரியைக் கொண்ட எழுப்புதல் கூட்டத்தில் பங்குகொண்டு, பீடத்தண்டை முழங்காற்படியிட்டு, தேவனோடு ஒரு அனுபத்தைப் பெற விரும்பினேன்” என்றார். மேலும் அவர், “நான் அங்கே முழங்காலில் இருந்தபோது…” என்றார். இவர் ஜனாதிபதி கூலிட்ஜ் என்பவரின் கீழ் வாஷிங்டனில் அரசாங்க அரசியல் நிபுணராகப் பணியாற்றிய ஒருவர் ஆவார். அவர், “மேல் நோக்கிப் பார்த்தபோது,” அவர், “இயேசுவை ஒரு தரிசனத்தில் கண்டேன்” என்று கூறினார். மேலும் அவர், “நான் ஒன்பது வித்தியாசமான மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவன்” என்றார். அவர் தொடர்ந்து, “ஆனால் அந்த நேரத்தில் அந்த ஒன்பது மொழிகளிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட போதுமானதாய் எடுத்துப் பயன்படுத்திப் பேச கண்டறிய முடியவில்லை” என்றார். எனவே, “நான் என்னுடைய கரத்தை மேலே உயர்த்தினபோது, பேசுவதற்கு ஒரு புதிய பாஷையை அவர் எனக்குத் தந்தார்” என்றார். மேலும் அவர், “நான் அவருடைய முகத்தின் மகிமையைக் கண்டிருக்கிறேன்” என்றார். 37 இந்தப் பெண்மணி என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், இயேசு ஒரு மனிதனாய், ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தாரேயன்றி வேறொன்றுமாயிருக்கவில்லை” என்றாள். அப்பொழுது நானோ, “என் சகோதரியே, ‘அவர் தேவன்’” என்றேன். 38 மேலும் அவள், “நீர் அவரை தெய்வீகத்தன்மைக் கொண்ட தேவனாக்குகிறீர், ஆனால் அவர் தேவனல்ல” என்றாள். ஆகையால் அவள், “லாசருவின் கல்லறைக்குப் போகும் வழியில் ‘அவர் கண்ணீர் விட்டார்’ என்று வேதம் கூறியுள்ளதே” என்றாள். 39 நிச்சயமாகவே, அவர் தேவனுடைய இருதயமாயிருந்தார். நாம் பாடுபடுகிறது போல அவர் பாடுபட்டார். நாம் மாம்சத்தில் இருப்பதுபோல அவரும் மாம்சத்தில் இருந்தார். நாம் செய்கிற காரியங்களை, அதே வாஞ்சைகளை அவர் தம்முடைய சரீரத்தில் கொண்டிருந்தார். அதே சமயத்தில் ஒரு பரிபூரண பலியானார். அவர் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர் செய்தார். ஆனால் நான்…கூறினேன்… அவளோ, “லாசருவின் கல்லறைக்குப் போகும் வழியில் அவர் கண்ணீர் விட்டாரே” என்றாள். 40 அப்பொழுது நான், “ஆனால், ஓ, பெண்மணியே, அது உண்மை. அவர் அழுதுகொண்டிருந்தபோது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் அவர் அங்கே அந்தக் கல்லறை அருகில் அமைதியாய், மரித்துப்போய் கிடத்தப்பட்டதாயிருந்த, ஒரு சீலையினால் சுற்றப்பட்டு, ஒரு அழுகிப்போன நிலையில் இருந்த அந்த சரீரத்தண்டை நின்றபோது மனிதனாயிருந்தார்; பின்னர் அவர், ‘அந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்’ என்றாரே. அதுமட்டுமின்றி அவர் தம்மை அந்த சிறு உருவத்திலிருந்து வெளிப்படுத்தி, ‘லாசருவே, வெளியே வா’ என்று சத்தமிட்டுக் கூறினாரே. அப்பொழுது நான்கு நாட்களாய் மரித்துப் போயிருந்த ஒரு மனிதன் தன்னுடையக் காலூன்றி எழும்பி நின்றானே!” என்றேன். 41 அது என்னவாயிருந்தது? அழிவு தன்னுடைய சிருஷ்டிகரை அறிந்துகொண்டது. ஆத்துமா தன்னுடைய ஆண்டவரை அறிந்து கொண்டது. அந்த மகத்தான வல்லமையுள்ள ஜெயவீரர் தாமே மரணம், பரலோகம், பாதாளம் மற்றும் கல்லறையின் மேல் வல்லமையுடையவராய் இருந்ததை அங்கே நிரூபித்தார். 42 நிச்சயமாகவே, அது நம்முடைய இருதயத்தை சிலிர்க்கச் செய்கிறது! நீங்கள் கிண்ணரங்களை அடித்து, எக்காளங்கள் ஊதுவதைக் குறித்துப் பேசுகிறீர்களா? அவர் பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துருவை ஜெயங்கொண்டு, சிறைப்பட்டிருந்த நம்மை விடுதலையாக்கின இந்த ஞாபகார்த்தமான நாளின் நிமித்தம் உலகமானது இக்காலையில் இதற்கு முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்கு அவருடைய ஜனங்களின் ஆராவாரத்தையும், கூச்சலிடுதலையுங்கொண்ட ஒரு குதூகலப் பெருவிழாக் கொண்டாட்டமாய் இருந்திருக்க வேண்டும். 43 ஆம், அவர் ஒரு மனிதனாயிருந்தார். அது உண்மை. அவர் ஒரு மனிதனாயிருந்ததை நிரூபித்தார். அவர் தேவனாயிருந்ததையும் நிரூபித்தார். ஒரு நாள் இரவு… 44 ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியாகக் கொண்டு கொந்தளிக்கிற மகா சமுத்திரத்தில் ஒருக்கால் இந்தக் காலையில் தொலைவில் உள்ள் அந்தக் கொந்தளிக்கும் சமுத்திரத்தில் மாண்டுபோன உங்களுடையப் பையன்களை இழந்த சில தாய்மார்கள் இங்கிருக்கலாம். அவர்கள் ஒருக்கால் இந்தப் பரந்த உலகத்தின் யுத்த களத்தில் சமுத்திர அலைகளில் சிக்குண்டு அடியில் அமிழ்ந்து மாண்டு போயிருக்கலாம். உங்களுக்கு அன்பார்ந்தவர்களில் சிலர் அங்கே சமுத்திரத்திற்கடியில் மடிந்துபோய் கிடக்கலாம். 45 ஆனால் ஒரு இரவு அவர் ஒரு சிறு படகில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு புட்டியின் மேல் மூடி சமுத்திர அலைகளின் மீது தத்தளித்து துள்ளிக் குதிப்பது போன்று படகானது அலைகளில் குதித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது அவர் எழுந்து தன்னுடையக் காலை கப்பற்பாயின் நுனிக் கயிற்றின் மேல் வைத்து, வானத்தை நோக்கியவாறு அண்ணார்ந்துப் பார்த்துவிட்டு, “இரையாதே, அமைதலாயிரு” என்றார். அவர் கூறினவுடனே அலைகள் “அமைதலாயிற்றே!” அந்த மகா சமுத்திரம் தன் மேல் ஒரு சிறு அலையதிர்வு கூட இல்லாத அளவிற்கு அமைதியாயிற்று. நிச்சயமாகவே, அவர் அவ்வாறு கூறியிருந்தார். 46 அவர் ஒரு மனிதனைப் போல பசியுற்றார் என்பது உண்மைதான், அவர் மலையிலிருந்து இறங்கி வந்தபோது, அவர் பசியாயிருந்தார், எனவே புசிப்பதற்கு ஏதாகிலும் கிடைக்குமா என்ற ஒரு மரத்தை நோக்கிப் பார்த்தார், ஏனென்றால் அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும், சில சிறு மீன்களையுங்கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்தபோது, அவர் ஒரு மனிதனைப் பார்க்கிலும் மேலானவராயிருந்தார். 47 அவர் ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நேற்றைய முந்தின தினத்தில்தான் சிலுவையில் தொங்கி, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று இரக்கத்திற்காக கதறினார். அவர் ஒரு மனிதனைப் போல மரித்தார். ஆனால் ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் காலையில் அவர் யாராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் மரணம் மற்றும் கீழுள்ள பாதாளத்தின் கட்டுகளை முறித்து, கல்லறையிலிருந்து எழும்பி, “நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்று வெற்றிச் சிறந்து கூறி, தம்முடைய மேசியாத்துவத்தின் கடைசி முத்திரையை அளிர்த்தார். 48 அதோ ஜெயவீரர்! மேலாடைத் துண்டுகளை எடுத்து அதை அசைத்துக் காட்டுவதைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்களா? நாம் ஆரவாரமிடுகிறோம், நாம் ஓடுகிறோம், நாம் கூச்சலிடுகிறோம், நாம் சத்தமிடுகிறோம் என்ற காரணத்தினாலேயே ஜனங்கள் நம்மைப் பயித்தியக்காரர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள், “யுத்தம் முடிவுற்றுவிட்டது” என்ற பரலோகத்தின் ஜெயத்தொனியின் அதிர்வுகளை ஒருபோதும் உணர்ந்ததேயில்லை. நம்முடைய மகத்தான, வல்லமையுள்ள ஜெயவீரர் முழுமையாய் ஜெயங்கொண்டுவிட்டாரே! அவர் இக்காலையில் தொடப்பட முடியாதவராய் தனியே நிற்கிறாரே! 49 அவர் பூமிக்கு வந்தபோது, அவர்கள் அவரை இழிவான பெயரினால் அழைத்தனர், அவர்கள் அவரை “ஒரு மதவெறியன்” என்று அழைத்தனர். மேலும் அவர்கள் அவரை பெயல்செபூல், “பிசாசுகளின் இளவரசன்” என்று அழைத்தனர். அப்படித்தான் அழைத்தனர். அவர் பூமியிலேயே மிகவும் இழிவான பட்டிணமாகிய எரிகோவிற்குச் சென்றபோது, அப்பட்டிணத்திலேயே மிகவும் குள்ளமான மனிதன் அவரை நோக்கிப் பார்க்க முடிந்தது. ஆனால் தேவனோ ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவரை உயிரோடெழுப்பினார். அந்தவிதமாகத்தான் மனிதன் அவருக்குச் செய்தான். ஆனால் அவர் அன்பின் ஆயுதத்தினால் ஒவ்வொரு பிசாசையும் ஜெயங்கொண்டார். 50 தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, பரலோகத்திலும், பூலோகத்திலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார். பரலோகத்தில் உள்ள் ஒவ்வொன்றும் “இயேசு” வின் நாமத்திற்குத் தலைவணங்குகிறது, ஒவ்வொரு தூதனும், ஒவ்வொரு ஏகாதிபதியும், எல்லாமே, “இயேசுவின்” நாமத்திற்குத் தலை வணங்குகின்றனரே! நாவுகள் யாவும் அவரை அறிக்கைப்பண்ணும், முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். அவர் வானங்களை கீழ் நோக்கிப் பார்க்கும்படிக்கு, வானாதி வானங்களுக்கு மேலாக உயர்த்தருளினார். அதுதான் வல்லமையுள்ள ஜெயவீரர்! அதைச் செய்தவர் அந்த ஒருவரே! நாம் கடந்த இரவு பார்த்தது போன்று, அவர் தன்னுடையப் பக்கவாட்டில் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரியத் திறவுகோல்கள் தொங்கிக்கொண்டிருக்க, “பயப்படாதே, மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென்” என்று கூறித் (ஆங்கிலத்தில் மேலும் என்ற ஒரு இடைச் சொல் உள்ளது) தொடர்ந்து, “நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். அவைகள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன” என்று கூறினார். ஒரு ஜெயவீரனைக் குறித்துப் பேசுவோமே! “காரணம் நான் ஜெயங்கொண்டு, நீங்கள் பயணிப்பதற்கான ஒரு பெரும்பாதையை நான் மாத்திரமே உண்டு பண்ணினேனே!” 51 பரலோகத்திலிருந்து மனிதன் புறக்கணிக்கப்பட்டு, பெரும்பாதையும் அடைப்பட்டுப்போயிற்று, பெரும்பாதையே இல்லாமற் போயிற்று. ஆனால் எங்கே பெரும்பாதை இல்லாமலிருந்ததோ, அந்த ஒன்றை உண்டுபண்ண அவர் வந்தார். ஓ, என்னே! முதல் படை வரிசையில் சந்தேகப் பிசாசுகள் இருந்தன, அடுத்தபடியாக பொல்லாங்கு காணப்பட்டது, அதற்கடுத்தபடியாக சுயநலம் காணப்பட்டது; இந்தப் பூமி முழுவதுமே பிசாசின் வல்லமையின் ஆதிக்க வரம்பினால் நிறையப்பட்டு, சுகவீனமும், வியாதிகளுமாய்க் காணப்பட்டன. ஆனால் பரலோகத்திற்கு எழுந்தருள துவங்கிவிட்டபோதோ, கடந்த இரவு நாம் அவர் தன்னுடையப் பக்கவாட்டில் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராய் பாதாளத்திலிருந்து புறப்பட்டு வந்ததைப் பார்த்தோம். இந்தக் காலையில் நாம் அவரை ஏற்றுக்கொள்கிறோம். அல்லேலூயா! அவர் எழும்பினபோது, அவர்…அவர் வெற்றிச் சிறந்தார். அவர் மேலேறிச் சென்றபோது, அவர் மனிதனைப் பற்றிப் பிடித்திருந்த ஒவ்வொரு பிசாசின் வல்லமையையும் முறித்துப் போட்டார். அவர் உன்னத்திற்கு ஏறி மனிதருக்கு வரங்களை, பரிசுத்த ஆவியின் வரங்களை அருளினார். வல்லமையுள்ள ஜெய வீரராயிற்றே! அவர் இக்காலையில் தனிமையாய் நிற்கிறாரே! அவருக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இடையே ஆசீர்வதிப்பட்ட பண்டையப் பரிசுத்தத்தின் பெரும்பாதை உள்ளது. நீதிமான்களோ அதில் நடப்பார்கள். மறைந்தோடுவதற்கான வழியேக் கிடையாது. மகிமையிலிருந்து ஒரே ஒரு வழி மாத்திரமே வெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர் பிசாசின் வல்லமைகளைக் கொண்ட நடைப்பாதைகளினூடாக நடந்து சென்றபோது, அவர் நமக்காக வழிநேடுக ஒரு பெரும்பாதையை உண்டுபண்ணி, அதில் அவர் இரத்த அடிச்சுவடுகளை விட்டுச் சென்றார். அவர் இக்காலையில் வல்லமையுள்ள ஜெய வீரராக உன்னதத்திலே வீற்றிருக்கிறார். 52 அவருடைய ஜனங்களோ ஒரு குதூகலமான கொண்டாட்டத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறார்கள், உலகத்தைச் சுற்றிலும் பத்தாயிரக்கணக்கானோர் ஜெயத்தை ஆராவாரமாய் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர். 53 இந்தப் பண்டைய குளிர்ந்த சம்பிரதாயமான சபையினை சேர்ந்து கொள்ளுதலை நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். யாரோ ஒருவர் கூறினதை என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது…அதனுடையப் புறக்கணிப்பை நான் உங்களுக்கு காண்பிக்க உள்ளேன். 54 இங்கே முதலாம் உலகப்போர் முடிவுற்றவுடனே, ஒரு செய்தி வீதியினூடாக தெரிய வந்து, அது ஒரு கிரேஹவுண்டு என்று பெயரிடப்பட்ட பேருந்துக்குள்ளிருப்பவருக்கு தெரியவந்தது. அப்பொழுது அவர்கள், “என்ன சத்தம் அது? அது எதைக் குறித்தாயுள்ளது?” என்று கேட்டனர். 55 அப்பொழுது அவர்களில் ஒருவர், “இங்கே பாருங்கள், இங்கே செய்தித்தாளைப் பாருங்கள். யுத்தம் ஓய்ந்துபோயிற்று” என்றார். அப்பொழுது எல்லோருமே அழுது ஆர்ப்பரித்தனர். 56 ஆனால் ஒரு ஸ்திரியோ, “ஓ, என்னே, ஏன் அது அந்த விதமாக முடிவு பெற்றுவிட்டது?” என்றுக் கூறி, “அது இன்னும் ஒரு சில நாட்கள் நீடித்திருந்ததானால், அப்பொழுது, ஜானும், நானும் கவலையின்றி உட்கார்ந்து கொண்டிருந்திருப்போம். நாங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்திருப்போமே,” என்று கூறினாள். 57 அப்பொழுது பேருந்தின் படியில் பின்னாக நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் அந்த ஸ்திரீயைப் பிடித்து, அந்த கதவினூடாக கிட்டத்தட்ட இழுத்துத் தள்ளிவிட்டான். காவலர் அந்த மனிதனை கைது செய்தபோது, அவன், “நான் அதைச் செய்ததற்கு காரணம் என்னவெனில், என்னுடைய இரண்டு பையன்கள் அங்கே யுத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண்மணிக்கோ அக்கறையாய் கவலைகொள்ளும்படிக்கு அங்கே யுத்தத்தில் யாருமே இல்லை” என்று கூறினான். எனவே அவன், “நான் என்னுடைய உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியாமற்போயிற்று” என்றான். 58 ஓ, சகோதரனே! எனக்கு அங்கே தொலைவில் ஒரு தகப்பனார் இருக்கிறார். எனக்கோ அங்கு தொலைவில் என்னுடைய அன்பார்ந்தவர்கள் இருக்கின்றனர். இயேசு ஜெயங்கொண்டபோது, அது எனக்கு ஏதோ ஒரு காரியமாயிருக்கிறது. எனக்கு ஒரு மனைவி உண்டு. எனக்கு ஒரு குழந்தை உண்டு. எனக்கு அன்பார்ந்தவர்கள் உண்டு. அந்த மகத்தான, வல்லமையுள்ள ஜெயவீரர்! நீங்கள் என்னை, “பரிசுத்த—உருளுபவர்” அல்லது ஒரு “மத வெரியன்”, இன்னும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால் அந்த பெரிய யுத்தத்தைக் குறித்து நினைக்கும்போது, அது முடிவுற்று, கிரயம் செலுத்தப்பட்டு, வெற்றி சூடப்பட்டாயிற்று. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார். அவருடைய மேசியாத்துவ முடிவான முத்திரை அதை முற்றுப்பெறச் செய்தது. அவர் இக்காலையில் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களோடு உயிரோடிருக்கிறார். அக்கரையிலே எனக்கு அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள். நான் இந்தப் பெரிய பண்டையப் பெரும்பாதையில் அவர்களைக் காண நடந்து செல்கிறேன். என்னை பித்துபிடித்தவன் என்று எண்ணாதீர்கள். ஓ, ஆனால் அவை யாவும் முடிவுற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதுவே ஒரு முடிவுபெற்றக் கிரியையாயுள்ளது. ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டுபோய்விட்டார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்; என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்! 59 இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பண்டையப் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மேலே உள்ள இந்த ஆச்சரியமானப் பண்டையப் பெரும் பாதையில் நம்மை வழிநடத்துகிறது, ஓ, அது எவ்வளவு மகிமையாய் உள்ளது! அதைக் குறித்து நான் எப்படி வெட்கப்பட முடியும்? நான் பரிசுத்த பவுலோடு இக்காலையில் நின்று, “நான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன், ஏனென்றால் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது என்றே இதைக் கூறுகிறேன். அது சுகவீனத்தின் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது. அது மரணத்தின் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது. அது கல்லறையின் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது.” 60 அந்தக் கண்டிப்பான, பண்டைய அப்போஸ்தலன் தன்னுடையப் பாதையின் முடிவிற்கு வந்தபோது, அவர்கள் அங்கே அவனுடைய கல்லறைக் குழியைத் தோண்டினர், அப்பொழுது மரணமானது அவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தது. அவனோ மரணத்தின் முகத்தைப் பார்த்து நகைத்தான். அப்பொழுது அவன், “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்றான். அதன் பின்னர் அவன் தேவனை ஸ்தோத்தரித்து, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று ஆர்ப்பரித்தான். 61 இதுவரை வாழ்ந்தவர்களிலேயே வல்லமையான ஜெயவீரர், இதுவரை மரித்தவர்களிலேயே வல்லமையான ஜெயவீரர், ஏனென்றால் அவர் ஒருவரால் மாத்திரமே ஜெயங்கொள்ள முடிந்தது. மரித்து, மரணத்தை ஜெயங்கொண்டு, உயிரோடெழுந்து வெற்றிச் சிறந்தாரே! அவர் யாராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். அது அவருடைய மேசியாத்துவத்தின் கடைசி முத்திரையாயிருந்தது. 62 இப்பொழுது இந்தக் காலையில் இந்தக் கட்டிடத்தில் தற்செயலாக முடிவுற்ற யுத்த சந்தோஷத்தை அறியாத வெதுவெதுப்பான சபை அங்கத்தினர் யாரேனும் இருக்கிறீர்களா? ஜனங்கள் ஆராவாரமிடுகிறார்களே, ஜனங்கள் களிகூருகிறார்களே, ஜனங்கள் அழுகிறார்களே! நீங்கள், “அவர்களோடுள்ள காரியம் என்ன?” என்று கேட்கலாம். அது ஒரு முடிவுபெற்ற காரியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அது முற்றுபெற்றுவிட்டதே! நிச்சயமாகவே! நாம் முரசுகளைக் கொட்டுகிறோம். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை தட்டுகிறார்—ஆசி.] நாம் எக்காளங்களை ஊதிக்கொண்டிருக்கிறோம். சுவிசேஷமோ வெளியே போய்க்கொண்டிருக்கிறது. மகிமையும், தேவனுடைய வல்லமையும் அறியப்பட்டிருக்கிறது. அது ஒரு முடிவுபெற்ற கிரியை, உடன்படிக்கையோ கையெழுத்திடப்பட்டாயிற்று; தேவனுக்கு மகிமை, கிறிஸ்து அதை தம்முடைய சொந்த இரத்தத்தில் கையொப்பமிட்டுவிட்டாரே! யுத்தமோ முடிவுற்றுவிட்டது. வெற்றி சூடப்பட்டாயிற்று. நான் அந்த வெற்றியை ஒருபோதும் சூடவில்லை; அவரே அதை சூட்டினார்! நான் அதைக் குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறேன். என்னே! 63 அந்தப் பையன்களில் சிலர் கடல் கடந்து திரும்பி வந்தபோது, அவர்கள் என்னிடத்தில் கூறினர். கப்பல் நியூயார்க் பட்டிணத்திற்குள் வந்தபோது, அது துறைமுகத்திற்குள் வந்தபோது, அவர்கள் அங்கே நோக்கிப் பார்த்து, அந்தச் சுதந்திரச் சிலையினைக் கண்டனர். நீங்கள் காண்கிற முதல் காரியமே அந்தச் சிலை நிற்பதைக் காண்பதாகும். அப்பொழுது அவர்கள் எழும்பி நின்றனர். அவர்களில் சிலர் முடமான போர்வீரர்களாயிருந்தபடியால், அவர்களும் அந்தச் சிலையைக் காணும்படிக்கு கப்பலின் மேல்தளத்தில் இருந்தனர். அப்பொழுது அவர்கள் அந்தச் சுதந்திரச் சிலையைக் கண்டவுடன் அழத் துவங்கிவிட்டனர். அவர்கள் கதறியழுதனர். அவர்களால் அடக்கிக்கொள்ள முடியாமற்போயிற்று. அங்கே மிகப்பெரிய உருவங்கொண்ட முரட்டு சுபாவங்கொண்ட ஒரு மனிதன் நடுங்கினவாறு ஆடிக்கொண்டே நின்றான். அவர்களால் தங்களுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாமற்போயிற்று. ஏன்? அது விடுதலையின் சின்னமாயிருந்தது. அந்தச் சுதந்திரச் சிலைக்குப் பின்னால் அவர்களுடையத் தந்தை, தாய், தாங்கள் நேசிப்பவர்கள், காதலி, மனைவி, குழந்தை மற்றும் அந்தப் பூமியில் அவர்களுக்கு அருமையானவர்களாயிருந்த எல்லாருமே அதற்குப் பின்னால் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கள் தேசத்திற்குள் நடந்து செல்லும் முன்பே, அது சுதந்திர தேசமாய், நேர்த்தியான வீடாய் இருந்ததை அவர்கள் அடையாளங்கொண்டு கொண்டனர். நிச்சயமாகவே, அந்தப் பண்டையக் கொடி பறத்தல் உங்களுடைய உணர்ச்சிகளை குலுக்கிவிடும். போர்க்காய வடுக்களோடு ஒரு யுத்தவீரன் துறைமுகத்திற்குள்ளாக வருவதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாகவே, அது ஒரு அற்புதமான நேரமாயிருந்தது. 64 ஆனால் ஓ, சகோதரனே, இக்காலைகளில் ஒன்றில் பண்டைய சீயோனின் கப்பல் முழக்கமிடுகையில், நான் அந்தப் பழையச் சின்னமான அந்தப் பண்டையக் கரடு முரடான சிலுவை அங்கே நிற்பதைக் காண்கையில், காற்றானது அதனுடைய சாம்பல் நிறமான கொடிகளை அசைத்து பறக்கச் செய்ய, அதுவோ மரணத்தின் மூடுபனியினூடாக அசைந்து சென்று கொண்டேயிருக்கும். அது என்ன ஒரு ஜெயமாய் உள்ளது. ஏன்? அப்பொழுது நம்மால் நம்முடைய உணர்ச்சியை அப்படியே கட்டுப்படுத்த இயலாது என்பதில் வியப்பொன்றுமில்லையே! ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது; நாம் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்களாக மாறிவிட்டோம். அந்தக் காரியம் முடிவுற்றுவிட்டது. 65 ஆஸ்திரேலியாவில் அவர்கள் வடக்கு சிட்னி என்ற இடத்திலிருந்து தெற்கு சிட்னி வரைக்குமான இடத்திற்கு இடையே ஒரு பெரிய பாலத்தைக் கட்டி அமைத்திருந்தனர். எப்படி ஒவ்வொரு மனிதனும்…ஏன்? அவர்கள் அந்தப் பாலத்தைக் கட்ட ஒரு மனிதனைத் தேடிக் கண்டறிய முயற்சித்து தேசம் முழுவதும் சென்று பார்த்தனர். அந்தப் பணியோ மிகப் பெரியதாயிருந்தது, ஏனென்றால் யாருமே அப்பணியைச் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டிருந்தனர். கடைசியாக இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு மனிதன், “நான் அந்தப் பணியினைச் செய்வேன்” என்று கூறினான். அவன் அந்தப் பணியினைச் செய்யத் துவங்கும்போது, அந்த பாலத்தினுள் அமைக்கவிருக்கின்ற ஒவ்வொரு இரும்பு அச்சாணிகளையும் பரிசோதித்துப் பார்த்தான். அவனுடையக் கீர்த்தியானது துணிவுக்காட்டிப் பணையமாக வைக்கப்பட்டது. மேலும் அவன் எல்லா ஈர மண்ணையும், அப்பாலத்தில் கட்டப்படவிருந்த ஒவ்வொன்றையும் சோதனையிட்டான். அவன் தன்னால் முடிந்தளவு மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்து, மிகச் சிறந்த பொறித்துறை வினைஞர்களையும், மிகச் சிறந்த வேதியல் நிபுணர்களையும், தான் கண்டறிய முடிந்த மிகச் சிறந்த ஒவ்வொன்றையும் தன்னைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு பணியாற்றினான். முடிவிலே அந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன், அந்தப் பாலம் சோதனையோட்டமிட வேண்டிய நாள் வந்தது. 66 அப்பொழுது குறைகாணுவோர்கள் ஒரு பக்கமாக சற்று தூரத்தில் நின்று கொண்டு, “அது உறுதியாய நிற்காது. அது அதிர்ந்து கீழே விழுந்துவிடும். அதில் அதிகம் மணல்தான் உள்ளது” என்று கூறினர். 67 ஆனால் அவனோ மிகவும் ஆழமாய்த் தோண்டிக் கட்டியிருந்தான். அவன் அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தான். அந்தப் பாலத்தில் உள்ள ஒவ்வொன்றும் பரிசோதிக்கப்பட்டிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். மேலும் அவன், “அந்தப் பாலத்தினூடாக நானே முதல் பயணத்தை மேற்கொள்வேன்” என்றான். பின்னர் அவன் மாநகராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில், அவன் அந்தப் பாலத்தின் மீது நடந்துசெல்ல, அவனுக்குப் பின்னாக ஆறு பெரிய இரயில் வண்டிகள் அந்தப் பாலமே அதிரத்தக்கதாக வந்தன. அந்த பாலத்தைக் கட்டின அந்த மகத்தான மனிதன் இந்த ஊர்வலத்திற்கு முன்னால் நடந்து சென்று, “இந்தப் பாலம் உடைந்து விழுந்தால், நான் அதனோடு விழுந்துபோகிறேன்” என்ற விதமாகக் கூறி நடந்து சென்றான். ஆனால் அவன் உறுதியாக நம்பிக்கைக் கொண்டிருந்தான். 68 நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர் தம்முடைய சபையைக் கட்டினபோது, அந்தவிதமாகத்தான் அவர் கட்டினாரே! அவர் ஒவ்வொரு அச்சாணியையும், அதனுள் செல்லுகிற ஒவ்வொன்றையும் சோதித்தறிகிறார், ஏனென்றால் அது இரத்தத்தினால் கழுவப்பட வேண்டுமே! குறைகூறுவோர்களில் ஒருவன் ஒரு பக்கமாய் நின்று கொண்டு, “அது பரிசுத்த உருளையர் கூட்டம், அவர்களால் அதைச் செய்ய முடியாது” என்றனர். ஆனால் இந்த மகிமையான நாட்களில் ஒன்றில், இந்த மகத்துவமும், வல்லமையுள்ள ஜெயவீரர் இன்றைக்கு நமக்கு முன்பாக வெற்றிச் சிறந்து நடந்து செல்கிறாரே! அந்தப் பாதையோ அதிரட்டும், அது என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்,…ஆனால் அது அதில் ஒன்றுமே எங்கும் நழுவி கீழே விழவே விழாது. ஏனென்றால் அவர் வழியை உண்டுபண்ணி, அதை கட்டிமுடித்தார். நிச்சயமாகவே! 69 இன்றைக்கோ நாம் ஜனங்களின் ஆசார நடைமுறைகளின்மேல் சிந்தித்துப் பார்த்து, உலகத்தின் காரியங்களின் மேல் நம்முடைய சிந்தையை வைத்துள்ளோம். ஆனால் சகோதரனே, நான் உங்களுக்கு ஒரு காரியத்தை கூறட்டும், நான் சுவிசேஷத்தைக் குறித்து ஒருபோதும் வெட்கப்படேன்! ஓ, சகோதரனே, நான் மறுபடியும் பிறந்தவன், பரிசுத்த ஆவியினால், தேவனுடைய ஆவியினால் பிறந்த பண்டைய நாகரிகங்கொண்டவன். நான் அந்தவிதமாகவே பிறந்தேன், நான் அவ்வளவுதான், நான் எப்பொழுதும் அவ்விதமாயிருக்கவே விரும்புகிறேன். 70 அண்மையில் ஒரு சமயம் ஒரு பெண் கல்லூரிக்குப் படிக்கச் சென்றிருந்தாள். அவள் ஓர் அழகான சிறு பெண்ணாயிருந்தாள். அவள் வீடு திரும்பினபோது, அவள் தன்னுடையக் கல்லூரி எண்ணங்கள் சிலவற்றை தன்னோடு கொண்டு வந்தாள். 71 ஒருக்கால் இக்காலையில் உங்களில் சிலர் உங்களுடைய வெளிப்புற சிந்தனைகளை உங்களோடு கொண்டிருக்கலாம். உங்களுடைய ஏராளமான எண்ணங்களை சபைக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கலாம். அப்படியானால் அவைகளை வெறியேற்றிவிடுவதே நான் செய்யும்படி அறிந்துள்ள மிகச் சிறந்த காரியமாகும். 72 அப்பொழுது இரயில் வண்டி முன்வந்து நின்றபோது, அப்பெண் இறங்கினாள். அவள் தன்னுடன் எல்விஸ் பிரஸ்லியைப் போன்ற பாணியில் இருந்த நவநாகரீகத் தோற்றங்கொண்ட ஓர் இளம் பெண்ணை அழைத்து வந்திருந்தாள். உங்களுக்குத் தெரியுமா, அவள் அங்கே இரயில் வண்டி நின்ற இடத்தில் நின்று கொண்டிருந்தாள். அவளுடையத் தாயாரோ வெளியே நின்றுகொண்டிருந்தாள்; அந்த வயோதிகப் பெண்மணி தன் முகம் முழுவதும் தழும்புகளோடு, தோள்பட்டை தொங்கினவளாய், தன் தோளின் மீது பருத்தித் துணியிலான துண்டினை போர்த்திக்கொண்டு வெளிப்புறமாய் நின்று கொண்டிருந்தாள். அவளோடு இருந்த இந்த நவநாகரீகமான பெண் அந்த வயோதிகப் பெண்மணியைக் கேவலமாகப் பார்த்து, “அந்த பரிதபிக்கத்தக்க, அவலட்சணமான தோற்றங்கொண்ட இழிவான வயோதிகப் பெண்மணி யார்?” என்று கேட்டாள். 73 உங்களுக்குத் தெரியுமா? அது அந்தப் பெண்ணை அவ்வளவு வெட்கமடையச் செய்தபடியால், அவள், “எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டாள், ஏனென்றால் அவள் அளவுக்கு மீறி சரிபார்க்கிறவளாகவும், அநேக உலகப்பிரகாரமான கருத்துக்களைத் தன் சிந்தையில் கொண்டிருந்தவளுமாயிருந்தாள். ஆனால் அவ்வாறிருந்ததோ அவளுடைய சொந்தத் தாயாயிருந்தது. 74 அப்பெண் இரயிலிருந்து இறங்கினவுடனே, அந்த வயோதிகத் தாய் ஓடித் தன்னுடையக் கரங்களினால் அவளை கட்டி அணைத்துக்கொண்டாள். மேலும் அவள், “ஓ, அன்புக்குரியவளே, தேவன் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக” என்று கூறினாள். ஆனால் இப்பெண்ணோ அந்த வயோதிகத் தாயை தனக்குத் தெரியாதது போன்று அவளைத் தள்ளிவிட்டு நடந்து செல்லத் துவங்கினாள். தன்னுடையத் தயார் மிகவும் அவலட்சணமாக இருந்தபடியல், அவள் வெட்கமடைந்திருந்தாள். 75 இது நிகழந்தபோது, அந்த இரயிலில் இருந்த நடத்துனர் இச்சம்பவத்தை அறிந்திருந்தார். எனவே அவர் அங்கிருந்து நடந்துச் சென்று, அந்தப் பெண்ணுடையத் தோளின் மீது தன் கரத்தை அவர் வைக்க, அப்பொழுது அவளோ கூட்டத்தினருக்கு முன்பாக திரும்பி அவரைப் பார்க்க, அவர், “உனக்கு அவமானம்! உனக்கு அவமானம்” என்று கூறினார். மேலும் அவர், “உன்னுடையத் தாயார் உன்னைப் போல பத்து மடங்கு அழகாயிருந்த அந்த நேரத்தில் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். அந்தத் தாய் அவ்வளவு அழகாயிருந்தார். நான் அப்பொழுது அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தேன். நீயோ அப்பொழுது ஒரு சிறு குழந்தையாயிருந்தாய். நீ மாடியில் உன்னுடைய தொட்டிலில் படுத்திருந்தாய். உன்னுடையத் தாயாரோ பின் முற்றத்தில் துணிகளை உலர வைக்கும்படி தொங்கவிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது தீடிரென்று தீப்படித்துக் கொண்டபடியால், முழு வீடும் அக்கினிப் பிழம்பாய் காட்சியளித்தது. அந்த நேரத்தில் நீ மாடியில் இருந்ததை அறிந்த உன்னுடைய தாய் உடனே மாடிக்கு ஓடினாள். ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ கத்திக் கதறி அவளைப் பிடித்த நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்தத் தாயோ அவர்களை உதறித் தள்ளிவிட்டு அந்தத் தீப்பிழம்புகளினூடாக பாய்ந்து மாடிக்குச் சென்று, தன்னுடைய சரீரத்திலிருந்து ஆடைகளைக் களைந்து, அதில் உன்னைச் சுற்றிக்கொண்டு அந்த அக்கினி ஜூவாலையினூடாகவே திரும்பி உன்னை பத்திரமாய் கொண்டு வந்து முற்றத்திலே மயங்கி விழுந்தாள், நீயோ அவளுடைய கரத்தில் பத்திரமாய் இருந்தாய். ஆனால் அவள் தன்னை பாதுகாத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவளோ உன்னைப் பாதுகாத்தாளே. அந்தக் காரணத்தினால்தான் நீ இன்றைக்கு அழகாய் இருக்கிறாய். அந்தத் தாயோ அவலட்சணமாகக் காட்சியளிக்கிறாள் என்று கூறி, அந்தத் தாயின் தழும்புகளைக் குறித்து நீ வெட்கப்படுகிறேன் என்று நீ என்னிடம் கூறுகிறாயா?” என்று கேட்டார். நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். முழு உலகமும் விடுதலையாகிச் செல்ல இயேசு மாத்திரம் சிலுவையை சுமக்க வேண்டுமோ? ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவை உண்டு, எனக்காக ஒரு சிலுவை உண்டே. 76 இயேசு இந்த உலகத்தினால் “பெயல்செபூல்” என்று கருதப்பட்டார். அவர் எள்ளி நகையாடப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, ஒரு சிலுவையின் மேல் தொங்கி எனக்காக அவமானமடைந்தார். எனவே நான் அவருடைய பரிசுத்தத்தின் நிந்தையைச் சுமக்க அதிக மகிழ்ச்சியடைகிறேன். ஆம் ஐயா, “பரிசுத்த உருளைகள்” என்று அழைக்கட்டும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னக் கூற வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள். அது ஒரு இம்மியளவும் தடுத்து நிறுத்திவிடுகிறதில்லை. இந்தக் காலையில் என் இருதயத்தில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து ஜீவிக்கிறார், ஆளுகைச் செய்கிறார் என்பதற்காக மாத்திரமே நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் அவருடையப் பிரஜைகளில் ஒருவனாய் இருக்கிறேன். நீங்களும் கூட அவ்வாறே இருக்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். 77 இப்பொழுது நம்முடைய நேரம் கடந்துவிட்டது. நாம் கலைந்து செல்ல உள்ளோம் என்று கூறினபோது சரியாக ஏழு மணியாயிருந்தது. இப்பொழுது இன்னும் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் ஒன்பது முப்பதிற்கு மற்ற ஆராதனைகள் துவங்கும். நாம் ஜெபத்திற்காக சற்று நேரம் நம்முடையத் தலைகளை தாழ்த்துவோமாக. 78 ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நாற்பத்தைந்து நிமிடங்கள் கடந்துள்ளன, வார்த்தையானது புறப்பட்டுச் சென்று விட்டது. எங்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியாயிருக்கின்றன. குதூகல கொண்டாட்டமாயுள்ளது. வெறுமென ஒரு நாளுக்கான குதூகல கொண்டாட்டம் அல்ல, ஆனால் நித்தியத்திற்கான ஒரு குதூகல கொண்டாட்டமாயிற்றே! தூதர்களோ மகிமையில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஓ தேவனே, சபையானது வெற்றிக் களிப்பில் பாடிக்கொண்டிருக்கிறது. சந்தோஷ மணிகளோ ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆத்துமாக்களோ ஒரு காலத்தில் மரணத்திற்கேதுவாக ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு மரித்து, பிசாசினுடையக் கல்லறைக்குப்போக ஆயத்தமாயிருந்தன. பிசாசு ஜெயிக்கப்பட்டாயிற்றே! மரணம் ஜெயிக்கப்பட்டாயிற்று. கல்லறை ஜெயிக்கப்பட்டாயிற்று. வியாதி ஜெயிக்கப்பட்டாயிற்று. மூட நம்பிக்கை ஜெயிக்கப்பட்டாயிற்று. பகைமை எண்ணம் ஜெயிக்கப்பட்டாயிற்று. வெறுப்பு ஜெயிக்கப்பட்டாயிற்று. அலட்சியம் ஜெயிக்கப்பட்டாயிற்று. ஆசாரமுறைப் பண்பு ஜெயிக்கப்பட்டாயிற்று. தனக்குத்தானே பெயர் சூடிக்கொள்ளும் போலித்தனம் ஜெயிக்கப்பட்டாயிற்று. ஒவ்வொரு காரியமும் ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டது. கிறிஸ்துவே அந்த மகத்தான ஜெயவீரராயிருக்கிறார். இதோ, வல்லமையான ஜெயவீரரைப் பாருங்கள், (புலவன் கூறினான்) இதோ, அவரை தெளிவானக் காட்சியில் பாருங்கள், அவர் வல்லமையுள்ள ஜெயவீரராயிருக்கிறார், அவர் திரைச்சீலையை மேல் தொடங்கி கீழாக இரண்டாக கிழித்துவிட்டாரே. 79 அவர் தேவனிடத்திலிருந்து மனிதனை மறைத்திருந்த திரையை கிழித்துவிட்டார். இப்பொழுது தேவன் மனிதர் மத்தியிலே வாசம் செய்கிறார். தேவனுடைய சுகமளித்தலைத் தடுத்திருந்த அந்தத் திரையை அவர் கிழித்தெறிந்தார். தேவனுடையை ஆசீர்வாதங்களை தடுத்திருந்த அந்தத் திரையை அவர் கிழித்தெறிந்தார். தேவனுடைய சந்தோஷத்தை தடுத்திருந்த அந்தத் திரையை அவர் கிழித்தெரிந்துவிட்டார். தேவனுடைய சமாதானத்தைத் தடுத்திருந்த அந்தத் திரையை அவர் கிழித்தெறிந்துவிட்டார். அந்தத் திரைச்சீலை இரண்டாகக் கிழிக்கப்பட்டது. அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் ஒரு ஜெயவீரராக நடந்து சென்றாரே! யுத்தமோ முடிவுற்றுவிட்டது. அவர் தம்முடைய உயிர்த்தெழுதலில் அதை நமக்கு நிரூபித்துவிட்டார். இப்பொழுதோ பரிசுத்த ஆவியானவர் ஒரு சாட்சியாக, நம்மை வழி நடத்த அனுப்பப்பட்டிருக்கிறார். 80 ஓ நித்திய தேவனே, இந்தக் காலையில் இங்கே உள்ளேயும் வெளியேயுமிருக்கிற யாரேனும் சோம்பேறித்தனமாகத் தட்டிக் கழித்து நேரத்தை வீணாக்கியிருந்தால், பெரும்பாதையிலிருந்து வழியருகே விழுந்துபோய் ஒருபோதும் பெரும்பாதையின் மையத்தில் மகத்தான வீரர்களோடு, பெரும்பாதையின் மையத்தில் நடந்த மகத்தான வீரர்களோடு ஒருபோதும் நடக்க முடியாதவர்களாய் இருந்து வந்திருந்தால், இந்தக் காலையில் அவர்கள் தங்களுடைய எல்லாவற்றையும் உம்மண்டை ஒப்புவித்து, அங்கிருந்து எழுந்து வந்து எங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தரால் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிற இந்த மகத்தான ஜெயத்தைக் கண்டு களிகூர வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே இதை அருளும், ஏனென்றால் நாங்கள் இதைக் கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். 81 நாம் நம்முடையத் தலைகளை தாழ்த்தியிருக்கையில், இந்த நேரத்தில் நீங்கள் உங்களுடையக் கரங்களைக் கிறிஸ்துவினண்டை உயர்த்தி, “கிறிஸ்துவே, நான் மெச்சுகிறேன், நான் இனி மீண்டும் ஒருபோதும் உம்மைக் குறித்து வெட்கப்படேன். நான் சற்று தைரியமில்லாமல் இருந்து வந்தேன்” என்று கூறுவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே, கரங்கள் எங்கும் உயர்த்தப்படுகின்றனவே! “நான் சற்று தைரியமில்லாதவனாக இருந்து வந்துள்ளேன். நான் ஒருவிதமாக வெட்கமடைந்திருக்கிறேன். இப்பொழுதோ நான் என்னுடைய ஸ்தானத்தை உண்மையாகவே காண்கிறேன். நான் அவ்வாறு ஒருபோதும் இருந்திருந்திருக்கக் கூடாது. நான் தைரியமாய் நின்று சாட்சி கூறியிருக்க வேண்டுமே! நான் சரியாக அந்தவிதமாகவே இருக்க வேண்டும். நான் ஒவ்வொருவரிடமும் ‘நான் மீண்டும் பிறந்துள்ளேன்’ என்றே கூற வேண்டும். நான் ஒவ்வொருவரிடமும், ‘நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன்.’ நான் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன், ஏனென்றால் அது இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலனாயிருக்கிறது. நான் உண்மையாகவே ஒரு முன்நோக்கிச் செல்லும் கிறிஸ்தவனாயிருக்க வேண்டும். நான் அவ்வாறு இருக்கவில்லை. ஆனால் இந்த ஈஸ்டர் காலையிலிருந்து தேவனுடைய ஒத்தாசையினைக்கொண்டு நான் அவ்வாறு இருப்பேன். நான் அவ்விதமாய் இருப்பேன்” என்று கூற வேண்டும். நாங்கள் ஜெபிப்பதற்கு முன்னர் வேறு எவரேனும் உங்களுடையக் கரத்தை இப்பொழுது உயர்த்த விரும்புகிறீர்களா? தேவன் உங்களை, உங்களை, உம்மை ஆசீர்வதிப்பாராக. 82 என்னே, அவர்கள் எடுத்துள்ள தீர்மானங்களைப் பாருங்கள். இந்தக் காலையில் இந்தச் சிறுக் கூட்ட ஜனங்கள் மத்தியில் அமர்ந்துள்ளவர்களில் குறைந்தபட்சமாக இருபத்தைந்து அல்லது முப்பது பேர் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த மகத்தான வெற்றிக் களிப்புடையக் காலையிலிருந்து அவர்கள் தேவனுடையக் கிருபையினால் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாமல் தைரியமாய் நிற்கப்போகிறார்கள், ஏனென்றால் இரட்சிப்புண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. 83 ஓ தேவனே, இந்தக் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டிருக்கையில், இசையானது இனிமையாய் வீதியின் பின்னிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கையில், நீர், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று கூறியிருக்கிறபடியால், நாங்கள் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம். உம்முடைய உயிர்த்தெழுதலினூடாக அவர்களுக்கு ஜீவன் உண்டாகும்படி நீர் மரணத்தை உத்தரித்ததினால் அவர்கள் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்காகவும் ஒரு தப்பித்துக்கொள்ளும்படியான வழியை உண்டுபண்ண மாம்சமாக்கப்பட்டு, இரத்தத்தை உடையவராய், இரத்தம் சிந்த அப்பாலுள்ள அந்த மகத்தான ஆவிக்குரிய சரீரத்திலிருந்து ஒரு மனிதனாயிருக்கும்படி இரங்கிவர நீரோ தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டீர். ஆகையால் அதை மாத்திரம் செய்யாமல், (நாங்கள் அதை வேதாகமத்தில் வாசிக்கிறோம்) நீர் பூமியில் இருந்தபோது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததின் மூலம், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பிழையற்ற விதத்தில் நீர் அதை நிரூபித்துவிட்டீர். அது மட்டுமின்றி, நீர் ஆபிரகாமுக்குச் செய்ததுபோல, நீர் அதை இரட்டிப்பான நிரூபணமாக்கியிருக்கிறீர். அதுவுமல்லாமல் நீர் இப்பொழுது ஒரு சாட்சியாக பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பினீர். எனவே நாங்கள் ஸ்தோத்தரிக்கப்பட்ட அவருடையப் பிரசன்னத்தை எங்களோடும், எங்களுக்குள்ளும், எங்களுக்கு வழிகாட்டவும், சகல சத்தியத்திற்குள்ளும், வெளிச்சத்திற்குள்ளும் எங்களை நடத்தும்படியாகப் பெற்றுள்ளோம். 84 இந்தக் காலையில் இந்த அநேகக் கரங்கள் மேலே உயர்த்தப்பட்டு, “நான் இப்பொழுதே கிறிஸ்துவை என்னுடையவராக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, தேவனே, அவர்கள் இதுவரை அந்த மகத்தான மரணத்தையும், அடக்கத்தையும், தங்களுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தரின் உயிர்த்தெழுதலையும் சுட்டிக்காட்டும்படியாகத் தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்படாமலிருந்தால், இந்தக் காலை ஆராதனையில் அவர்கள் தங்கள் உடைகளைக் கொண்டுவந்து, இந்த மிகக் குளிர்ந்த தண்ணீர்த் தொட்டிக்குள்ளாக செல்ல ஆயத்தமாகும்படி திரும்பி வருவார்களாக. பிதாவே, இதை அருளும். 85 எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்கள் வரப்போகும் காலங்களினூடாக உமக்கு துதியை ஏறெடுப்போம். யுத்தம் முழுமையாய் முடிவுறும்போது, புகையானது முழுமையாய் மறைந்துபோகும்போது, சந்தோஷம் யாவும் முடிவுற, நாங்கள் பெற்றுக்கொண்ட ஒவ்வொன்றினாலும் இப்பூமிக்குரிய உதடுகளில் உம்மைத் துதிக்கிற நாங்கள் அப்பொழுது புதிய சத்தங்களோடும், புது சிருஷ்டிகளாய் உமக்கு அருகில் நின்று உம்மைத் துதிக்க வேண்டியவர்களாயிருப்போம். அப்பொழுது நாங்கள் சந்தோஷத்துடன் உள்ளே பிரவேசிப்போமாக. நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 86 இப்பொழுது நாம் எழும்பி நிற்போமாக…?…ஒன்பது முப்பதிற்கு நடைபெறவுள்ள ஆராதனையை மறந்துவிடாதீர்கள். வீட்டிற்குச் சென்று, உங்களுடையக் காலைச் சிற்றுண்டியை புசியுங்கள். இப்பொழுது நாங்களும் திரும்பி வந்து, உங்களோடிருக்க எதிர்ப்பார்க்கிறோம். அதன்பின்னர் இன்றிரவு ஆராதனையை நினைவில் கொள்ளுங்கள். நான் இந்தப் பிற்பகல் படிக்கவும், ஜெபிக்கவும் இங்கிருந்து செல்ல வேண்டும். 87 கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்றும், அவர் மரித்துப்போய்விடவில்லையென்றுமே நான் உங்களுக்குக் கூறுகிறேன். அவர் அந்த முதல் ஈஸ்டர் காலையில், அவருடைய ஜீவிய யாத்திரையினூடாகச் செய்த அதேக் காரியங்களைச் செய்யும்படிக்கும், அவர் உயிரோடிருக்கிறார் என்பதை காண்பிக்கும்படிக்கும் இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இருப்பார் என்று நான் என்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். அவ்வாறிருக்கவில்லையென்றால், அப்பொழுது நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாய் இருந்து வருகிறேன். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்தப் பெரிய அந்தகார வேளையில், வெளித்தோற்றத்தில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனபின்பும், நான் அவரை அறிந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிறிஸ்து என்னும் திடமான கற்பாறையின் மேல் நம்மால் நிற்க முடியும், மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலாயுள்ளது. சரி. 88 இப்பொழுது இயேசுவின் நாமத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள் என்று கலைந்து செல்லுகையில் நாம் பாடும் அச்சிறு பாடலை எல்லோரும் சேர்ந்து பாடுவோம். துயரமும் துக்கமுமான பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டுசெல்; அது…மகிழ்ச்சியையும்… 89 அப்படியே திரும்பி, உங்களுக்கு அருகில் உள்ள யாரியமாவது, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறி கரத்தைக் குலுக்குங்கள். [சகோதரர் பிரான்ஹாம் மற்றவர்களோடு கரங்களைக் குலுக்கி, களிகூர்ந்து கொண்டே, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுகிறார்—ஆசி.] புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 90 இப்பொழுது ஒவ்வொருவரும் இந்த வழியாக நோக்கிப் பார்க்கிறீர்களா? நாம் அவரை ஸ்தோத்தரிப்போமாக. நாம் நம்முடையக் கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி” என்று கூறுவோமாக. சரி ஒவ்வொருவரும் அவ்வாறே கூறுவோமே! கர்த்தாவே என் ஆத்துமாவை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி, கர்த்தாவே என்னை முற்றிலும் குணமாக்கினதற்காக உமக்கு நன்றி, உம்முடைய மகத்தான இரட்சிப்பை முழுமையாகவும் இலவசமாகவும் எனக்கு அளித்ததற்காக கர்த்தாவே, உமக்கு நன்றி. 91 என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்டக் காரியம்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென். ஆமென்” என் கிறார்கள்—ஆசி.] ஓ…பிள்ளைகளே ஒவ்வொரு காரியமும் இப்பொழுது முடிவுற்றுவிட்டது. ஒவ்வொரு காரியமும் முடிவுற்றுவிட்டது, இனி யுத்தமே கிடையாது, இனி போரேக் கிடையாது, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுமே கிடையாது. அது ஏற்கெனவே முடிந்துவிட்டது. நாம் வெறுமென களிகூருவோமாக! ஓ, என்னே! நாம் அவருக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம். …சாய்ந்திருப்பேன்… எல்லா அபாய அறிவிப்பிலிருந்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன். ஓ, இந்த யாத்திரிகப் பாதையில் நடப்பது எவ்வளவு இனிமையானது, நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன்; ஓ, நாளுக்கு நாள் அந்தப் பாதை எவ்வளவு பிரகாசமாகிறது, நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன். சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், எல்லா அபாய அறிவிப்பிலிருந்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன். நீங்கள் ஒரு கைக்குட்டை வைத்திருந்தால் அதை வெளியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். …ஓ, சாய்ந்திருப்பேன்… எல்லா அபாய அறிவிப்பிலிருந்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன். இப்பொழுது உங்களுடைய வேதாகமமே! சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், எல்லா அபாய அறிவிப்பிலிருந்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன் 92 அது என்னவாயிருந்தது? பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டு, எல்லாம் முடிந்தது, யாவும் முடிவுற்றது, யுத்தம் முடிவுற்று, கடைசி முத்திரையானது உடைக்கப்பட்டபோது, அவர் எழுந்தருளினார். அல்லேலூயா! சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், எல்லா அபாய அறிவிப்பிலிருந்தும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் சாய்ந்திருப்பேன், சாய்ந்திருப்பேன், நித்திய புயத்தின் மேல் சாய்ந்திருப்பேன். 93 தேவன் எந்த மண்ணிலிருந்து நம்மை எடுத்தாரோ, அந்த மண்ணை நோக்கியவாறு இப்பொழுது நாம் நம்முடையத் தலைகளை தாழ்த்துவோமாக. என்றோ ஒரு நாள் இந்த பூமியின் மண்ணிலிருந்து நாம் மேலேறிச் செல்வோம். நம்முடையக் கர்த்தர் மண்ணிலிருந்து கொண்டுவந்து, அவருடைய அழிவில்லாத ஆவியை நமக்கு அளிக்க, மண்ணுக்குள்ளாகச் சென்று, அந்த மண்ணிலிந்தே அவர் எழுந்தருளினார். அவருக்குள்ளிருக்கிற யாவரும் என்றோ ஒரு நாளில் அவரோடு ஆசீர்வதிக்கப்பட்டோரின் தேசத்திற்கு எழுந்தருளிப்போவோம். 94 நாம் நம்முடையத் தலைகளை வணங்கியிருப்போம். தேவனுடைய சபை என்ற சபைப் போதகர் சகோதரன் ஸ்மித் இக்காலையில் நமக்கு மத்தியில் இருப்பதை நான் காண்கிறேன். கடந்த இரவு என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். சகோதரன் ஸ்மித் நீங்கள் சற்று முன்னால் வாருங்கள். சகோதரன் ஸ்மித் ஜெபம் செய்து நம்மை கலைந்து செல்லும்படிக்கு அனுப்பி வைப்பாரா என்று நான் இப்பொழுது எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய வீடுகளுக்கு விரைந்து செல்கின்றபடியால், உங்களுடையக் காலைச் சிற்றுண்டியை உண்டு, ஞாயிறு பள்ளி ஆராதனைக்காகவும், ஞானஸ்நான ஆராதனைக்காகவும் திரும்பி வாருங்கள். ஆராதனையோ உடனடியாக ஒன்பது முப்பது மணிக்குத் துவங்கும். நாம் நம்முடையத் தலைகளை வணங்கியிருக்கையில், சகோதரன் ஸ்மித் ஜெபம் செய்து அனுப்பி வைப்பார்.